தோழிகளுடன் நீச்சல் குளத்தில் கொண்டாட்டம்: 2 குழந்தைகளுக்கு அம்மாவான ஜெயம் ரவி நாயகியின் புகைப்படம்!

தோழிகளுடன் நீச்சல் குளத்தில் கொண்டாட்டம்: 2 குழந்தைகளுக்கு அம்மாவான ஜெயம் ரவி நாயகியின் புகைப்படம்!

கடந்த 2005ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை ஒருவர் தற்போது 2 குழந்தைக்கு அம்மாவாகி உள்ள நிலையிலும் தோழிகளுடன் நீச்சல் குளத்தில் கொண்டாட்டம் செய்யும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2005ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த திரைப்படம் ’இதயத்திருடன்’. இந்த படத்தில் நாயகியாக நடிகை காம்னா அறிமுகமானார். அதன்பின் ஜீவா நடித்த ’மச்சக்காரன்’ ராகவா லாரன்ஸ் நடித்த ’ராஜாதி ராஜா’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்தார்.

இவர் கடந்த 2014ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை நடிகை காம்னா திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை காம்னா அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தோழிகளுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது மீண்டும் திரைப்படத்தில் நடிப்பதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பயனாக தற்போது கன்னடத்தில் ’கருடா’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அவர் தமிழில் நடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES