சிம்புவின் 'மாநாடு' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்!

சிம்புவின் 'மாநாடு' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்!

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சற்று முன் வெளியான இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும், ‘மாநாடு’ என்ற பெயர் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘மாநாடு’ சென்சார் தகவல்கள் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘மாநாடு’ திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும் இந்த படம் 2 மணி நேரம் 27 நிமிடங்கள் ஓடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இந்த படம் 147 நிமிடங்கள் திரையரங்குகளில் ஓடும்.

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், மனோஜ், டேனியல், பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES