விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு வசூல்.. எவ்வளவு தெரியுமா?
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
விஸ்வநாத் & சன்ஸ்
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜூ முதல் முறையாக நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பையும் இரட்டிப்பாக்கியுள்ளது.

டிக்கெட் முன்பதிவு
வருகிற 14-ஆம் தேதி வெளியாகவிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கிவிட்டது. முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம், அந்த படம் முன்பதிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் இருப்பார்கள்.
இந்நிலையில், தற்போது வரை நடைபெற்றுள்ள முன்பதிவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் ரூ. 90 லட்சம் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ரிலீஸுக்கு முன் மொத்தமாக முன்பதிவில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.