உச்சம் தொட்ட மாநாடு நேற்றைய வசூல்… மகிழ்ச்சியில் படக்குழு!

உச்சம் தொட்ட மாநாடு நேற்றைய வசூல்… மகிழ்ச்சியில் படக்குழு!

மாநாடு படம் நேற்று ஞாயிற்றுகிழமையை முன்னிட்டு 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
 

சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி  திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடிப்பில் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த படமாக மாநாடு அமைந்துள்ளது. ரிலிஸ் ஆனதில் இருந்து ஐந்து நாட்களாக வசூல் குறையாமல் இருப்பதே இந்த படத்தின் வெற்றியின் சாட்சி.
 

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை இந்த படத்துக்கு 2600 க்கும் மேற்பட்ட காட்சிகள் திரையிடப்பட்டனவாம். அதுவும் மல்டிப்ளக்ஸ்களில் கிட்டத்தட்ட எல்லா திரைகளிலும் மாநாடு திரைப்படமே ஓடியுள்ளது. இந்நிலையில் நேற்று மட்டும் படத்தின் வசூல் 10 கோடியை தாண்டிவிட்டதாம். நேற்றே விநியோகஸ்தர்கள் தாங்கள் போட்ட முதலை எடுத்துவிட்டதாகவும், இனிமேல் வசூலாகும் தொகை முழுவதும் லாபத்தில் சேர்ந்துவிடும் என சொல்லப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES