அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போன காத்து வாக்குல ரெண்டு காதல்… சிவகார்த்திகேயனோடு மோதல்!

அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போன காத்து வாக்குல ரெண்டு காதல்… சிவகார்த்திகேயனோடு மோதல்!

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படமும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளது.
 

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் டிசம்பர் மாதத்தில் இருக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம்.
 

பிப்ரவரி 18 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் டான் வெளியாகும் அதே நாளில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் வெளியாக உள்ளதாம்.

LATEST News

Trending News

HOT GALLERIES