லண்டன் சென்றது 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' குழு: ஆனால் படப்பிடிப்புக்கு இல்லையாம்!

லண்டன் சென்றது 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' குழு: ஆனால் படப்பிடிப்புக்கு இல்லையாம்!

வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பின்னர் நடிக்க ஒப்பந்தமான திரைப்படம் ’நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்பதும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே.

சுராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் வடிவேலு உடன் ஷிவாங்கி உள்பட பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் குழுவினர்களான சுராஜ், வடிவேலு, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் லண்டன் சென்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் லண்டன் சாலை ஒன்றில் வடிவேலுவுடன் சுராஜ் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது படக்குழு லண்டன் சென்றது படப்பிடிப்புக்கு இல்லை என்றும் பாடல் கம்போசிங் பணிகளுக்காக சென்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. லண்டனில் சந்தோஷ் நாராயணன் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திற்கான பாடலை கம்போஸ் செய்து வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் பாடல்கள் கம்போஸிங் முடித்துவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்புவார்கள் என்றும் அதன்பின்னர் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES