'பீஸ்ட்' ரிலீஸ் அப்டேட்டை அறிவித்தது சன் பிக்சர்ஸ்!

'பீஸ்ட்' ரிலீஸ் அப்டேட்டை அறிவித்தது சன் பிக்சர்ஸ்!

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’பீஸ்ட்’. விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த படத்தில் செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.



இந்த நிலையில் சற்று முன்னர் ’பீஸ்ட்’ படத்தின் அட்டகாசமான ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News