ஆண்ட்ரியாவா இது? புகைப்படத்தை நம்பாமல் ஆச்சரியத்துடன் பார்க்கும் ரசிகர்கள்!

ஆண்ட்ரியாவா இது? புகைப்படத்தை நம்பாமல் ஆச்சரியத்துடன் பார்க்கும் ரசிகர்கள்!

நடிகை ஆன்ட்ரியாவின் சமூக வலைதளப் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்கள் மட்டுமே பெரும்பாலும் இடம்பெற்றுவரும் நிலையில் பாவாடை தாவணியில் கிராமத்து கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படத்தை நம்ப முடியாமல் ரசிகர்கள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் சரத்குமார், ஜோதிகா நடித்த ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் ஆண்ட்ரியா, அதன்பின்னர் ’ஆயிரத்தில் ஒருவன்’ ’மங்காத்தா’ ’விஸ்வரூபம்’ ’என்றென்றும் புன்னகை’ ’அரண்மனை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஆண்ட்ரியாவுக்கு 2 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பாவாடை தாவணியில் கிராமத்து கெட்டப்பில் கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை ஆண்ட்ரியா பதிவு செய்துள்ளார். 18 வயது இளம்பெண் போல் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்துடன் தங்களது கமெண்ட்ஸை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படத்திற்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் ஒரு சில மணி நேரங்களில் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES