மோடி குறித்து கூறிய கருத்தை திரும்ப பெறுகிறாரா இளையராஜா: அவரே அளித்த விளக்கம்!

மோடி குறித்து கூறிய கருத்தை திரும்ப பெறுகிறாரா இளையராஜா: அவரே அளித்த விளக்கம்!

பிரதமர் மோடி மற்றும் அம்பேத்கார் ஆகியோர்களை ஒப்பிட்டு இளையராஜா கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கருத்தை திரும்ப பெற வேண்டும் என இளையராஜா அவர்கள் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில் இதுகுறித்து இளையராஜா விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில் மோடி மற்றும் அம்பேத்காரை ஒப்பிட்டு புத்தகம் ஒன்று வெளியிடப்பட்ட நிலையில் அந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய இளையராஜா மோடி மற்றும் அம்பேத்கர் ஆகிய இருவரையும் ஒப்பிட்டு சில கருத்துக்களை கூறியிருந்தார்.

அவரது இந்த ஒப்பீடு திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இளையராஜா தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அதற்கு இளையராஜா விளக்கம் அளித்து உள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:

பிரதமர் மோடி குறித்து நான் எழுதிய கருத்தை திரும்ப பெற மாட்டேன். அது என்னுடைய சொந்த கருத்து. நான் எந்த கட்சியும் சேர்ந்தவன் இல்லை. நான் படத்திற்கு போட்ட டியூனை திரும்ப பெற மாட்டேன், அதேபோல் நான் கூறிய கருத்தையும் திரும்ப பெறவேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES