சியான் விக்ரமின் 'கோப்ரா' படத்தின் மாஸ் அறிவிப்பு!

சியான் விக்ரமின் 'கோப்ரா' படத்தின் மாஸ் அறிவிப்பு!

சியான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வந்த ‘கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் மே 26ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் மாஸ் அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதன்படி ‘கோப்ரா’ திரைப்படத்தின் 2வது சிங்கிள் பாடல் நாளை அதாவது ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை சியான் விக்ரமின் பிறந்தநாளை அடுத்து அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இந்த பாடல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கும் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News