40 வயதில் மீரா ஜாஸ்மினின் கிளாமர் போட்டோஷூட்: வாயை பிளந்து ரசிக்கும் நெட்டிசன்கள்!

40 வயதில் மீரா ஜாஸ்மினின் கிளாமர் போட்டோஷூட்: வாயை பிளந்து ரசிக்கும் நெட்டிசன்கள்!

மாதவன் நடித்த ’ரன்’ விஷால் நடித்த ’சண்டக்கோழி’ ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை மீராஜாஸ்மின் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நிலையில் தற்போது 40 வயதிலும் கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ரசிகர்களை கிறங்கடிக்க வைக்கிறார்.

மாதவன் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவான ’ரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மீராஜாஸ்மின், அதன் பின்னர் விஜய் நடித்த ’புதிய கீதை’, அஜித் நடித்த ‘ஆஞ்சநேயா’, விஷால் நடித்த ’சண்டைக்கோழி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் ஒரு மலையாளத் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் மீராஜாஸ்மின் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் சோப்பு நுரை போன்ற கிளாமர் காஸ்ட்யூம் அணிந்து எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை வாயை பிளந்து ரசித்து வரும் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES