'காத்துவாக்குல ரெண்டு காதல்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

'காத்துவாக்குல ரெண்டு காதல்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியான நிலையில் அந்த தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

'காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் சுமார் 7 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் சமந்தாவுக்கு தெலுங்கில் மிகப்பெரிய மார்கெட் இருப்பதாலும், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவருமே தெலுங்கு ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பதாலும் இந்த படம் தெலுங்கு மாநிலங்களிலும் நல்ல வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் சுமார் ரூ.13 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

இந்த படத்தின் பட்ஜெட் 50 கோடி என்ற நிலையில் முதல் நாளே ரூ.13 கோடி வசூலானதால் படக்குழுவினர் திருப்திகரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES