'நானே வருவேன்' படத்தின் கதை திரைக்கதையை எழுதியது இந்த நடிகரா?

'நானே வருவேன்' படத்தின் கதை திரைக்கதையை எழுதியது இந்த நடிகரா?

தனுஷ் நடித்து முடித்துள்ள ’நானே வருவேன்’ திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை எழுதியது யார் என்பது குறித்து செல்வராகவன் சமீபத்தில் கூறியுள்ளார் .

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் கதை திரைக்கதையை தனுஷ் தான் எழுதி உள்ளதாகவும் இதுகுறித்து ஆறு மாத காலம் தனுஷூடன் தான் ஆலோசனை செய்ததாகவும் செல்வராகவன் கூறியுள்ளார். அதேபோல் மேலும் ‘புதுப்பேட்டை’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த ஆலோசனையும் தனுசுடன் செய்து கொண்டிருப்பதாகவும் விரைவில் இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் செல்வராகவன் கூறியுள்ளார்.

மேலும் ’நானே வருவேன்’ படத்தில் மொத்தம் 4 பாடல்கள் என்றும் ஒரு பாடலை செல்வராகவன் எழுதி உள்ளதாகவும் அந்த பாடலை யுவன்ஷங்கர் ராஜா பாடி உள்ளதாகவும் மற்ற பாடல்களை யுகபாரதி எழுதியுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனுஷ், செல்வராகவன், எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு உள்பட பலரது நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார் . ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES