ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன 'நண்பன்' பட நடிகை: வைரலாகும் செல்பி வீடியோ

ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன 'நண்பன்' பட நடிகை: வைரலாகும் செல்பி வீடியோ

விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘நண்பன்’ திரைப்படத்தில் நடித்த நடிகை ஆளே அடையாளம் தெரியாமல் மாறி வெளியிட்டுள்ள செல்பி வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது .

எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடித்த ’சிவா மனசுல சக்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அனுயா. அதன்பிறகு ’மதுரை சம்பவம்’ ’நகரம்’ ’நஞ்சுபுரம்’ ’நண்பன்’ ‘நான்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை அனுயா சமீபத்தில் செல்பி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் ஆளே அடையாளம் தெரியாமல் குண்டாக இருப்பதை அடுத்து ரசிகர்கள் ’சிவா மனசுல சக்தி’ படத்தில் நாங்கள் ரசித்த அனுயாவா இவர்? என்று கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்துவருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று முதல் நபராக நடிகை அனுயா வெளியேற்றப்பட்டார் என்பதும் அதற்குப் பின்னர் அவர் அளித்த பேட்டியில் தனக்கு தமிழ் சரியாக பேச வராததால் அந்த நிகழ்ச்சியில் தன்னால் நீடிக்க முடியவில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES