'ரெளடி பேபி' பாடல் சாதனைக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்: அதிர்ச்சியில் தனுஷ்

'ரெளடி பேபி' பாடல் சாதனைக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்: அதிர்ச்சியில் தனுஷ்

தனுஷ் நடித்த ’மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ’ரெளடி பேபி’ என்ற பாடல் யூ டியூபில் மிகப்பெரிய சாதனை செய்த நிலையில் அந்த சாதனைக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தனுஷ் தரப்பு அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது .

தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் ’3’ ‘எதிர்நீச்சல்’ ’காக்கா முட்டை’ மாரி’ ’காலா’ உள்ளிட்ட படங்கள் தயாராகியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வொண்டர்பார் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் ’மாரி 2’ படத்தில் இடம் பெற்ற ’ரெளடி பேபி’ என்ற பாடல் இடம் பெற்று இருந்தது என்பதும் இந்த பாடல் கோடிக்கணக்கான பார்வையாளர்களை பெற்று சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் வொண்டர்பார் நிறுவனத்தின் யூடியூப் சேனலை தற்போது மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். இதனால் தனுஷ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த யூடியூப் சேனலை மீட்கும் நடவடிக்கையில் தனுஷின் தயாரிப்பு நிறுவனம் இறங்கி உள்ளதாகவும் விரைவில் இந்த சேனல் மீட்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 

LATEST News

Trending News

HOT GALLERIES