பிக்பாஸ் சீசன் 6ல் டி இமானின் முன்னாள் மனைவியா?

பிக்பாஸ் சீசன் 6ல் டி இமானின் முன்னாள் மனைவியா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் விரைவில் 6வது சீசன் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சீசனுக்கான போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக தலைப்பு செய்திகளில் இடம் பெற்றுவரும் இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட்ஸ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

டி இமானின் சமூக வலைத்தள பதிவுகளுக்கு பதிலடி கொடுத்து வரும் மோனிகா தற்போது சமூக வலைதளங்களில் டிரென்ட் ஆகியுள்ளார். குறிப்பாக டி இமான் தனது இரண்டாவது மனைவியின் மகளை தனது மூன்றாவது மகளாக ஏற்றுக் கொண்டதாக கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ள மோனிகா ரிசார்ட்ஸ், இரண்டு நாய்க் குட்டிகளை தன் மகள்களாக ஏற்றுக் கொண்டதாக கூறியது அதிரடியாக இருந்தது.

இந்த நிலையில் டி இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட்ஸ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிகழ்ச்சி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES