தனுஷின் எதிர்பார்ப்புக்குரிய படத்தின் ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷின் எதிர்பார்ப்புக்குரிய படத்தின் ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ் நடித்த மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடித்த ’தி க்ரேமேன்’ திரைப்படம் இன்று அமெரிக்கா உள்பட ஒருசில நாடுகளிலும், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வரும் 22ஆம் தேதியும் ரிலீசாக இருக்கும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள இன்னொரு திரைப்படமான ’திருச்சிற்றம்பலம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் கேரக்டர்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது என்பது தெரிந்ததே. திருச்சிற்றம்பலம் கேரக்டரில் தனுஷ், சீனியர் திருச்சிற்றம்பலம் கேரக்டர்களில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இன்ஸ்பெக்டர் நீலகண்டன் கேரக்டரில் பிரகாஷ்ராஜ், ஷோபனா என்ற கேரக்டரில் நித்யா மேனன், அனுஷா என்ற கேரக்டரில் ராஷிகண்ணா, ரஞ்சனி என்ற கேரக்டரில் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் சுதந்திர தின விடுமுறை நேரத்தில் இந்த படம் வெளியாக இருப்பதால் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES