'ஜெயிலர்' படப்பிடிப்பில் எதிர்பாராமல் ரஜினி சந்தித்த பிரபலம்: யார் தெரியுமா?

'ஜெயிலர்' படப்பிடிப்பில் எதிர்பாராமல் ரஜினி சந்தித்த பிரபலம்: யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஜெயிலர்’. 

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதே ஸ்டூடியோவில் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ’ஜெயிலர்’ படப்பிடிப்பு நடைபெறும், அதே ஸ்டுடியோவில் ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பும் நடப்பதாக கேள்விப்பட்ட ரஜினிகாந்த், ‘ஜவான்’ படப்பிடிப்பு தளத்திற்கு சென்று ஷாருக்கானை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நடந்ததாகவும், இருவரும் தனிமையில் சினிமா உட்பட பல்வேறு விஷயங்களை பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ’ஜெயிலர்’  படத்தின் முக்கிய அப்டேட்டுகளை இன்னும் ஒரு சில நாட்களில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரஜினி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES