இந்த வாரம் வெள்ளியன்று 3 தமிழ் படங்கள் ரிலீஸ்.. ரசிகர்கள் மனதை வெல்லுமா?
கடந்த வாரம் வெள்ளி அன்று ’வீரன்’ ’காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ உள்பட ஐந்து படங்கள் வெளியான நிலையில் மேற்கண்ட இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் வெள்ளி அன்று மூன்று தமிழ் படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் அவை எந்த அளவிற்கு ரசிகர்கள் மனதை கவரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் உருவான ’போர் தொழில்’ என்ற திரைப்படம் வரும் வெள்ளி என்று வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் டிரைலர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் இந்த படத்திற்கு ஓரளவுக்கு எதிர்பார்ப்பு உள்ளது.
அதேபோல் நீண்ட இடைவெளிக்கு பிறகு சித்தார்த் அதிரடி ஆக்ஷனில் களம் இறங்கி இருக்கும் திரைப்படம் ’டக்கர்’. இந்த படமும் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளது. சித்தார்த், யோகி பாபு, திவ்யன்ஷா உள்பட பலர் நடித்த இந்த படம் கார்த்திக் கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

மேலும் சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகிய ’விமானம்’ என்ற திரைப்படமும் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளது. விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற தனது மகனின் கனவை தந்தை சமுத்திரக்கனி நிறைவேற்றினாரா என்ற கதையம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் ரசிகர்கள் மனதை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஹாலிவுட் திரைப்படங்கள் ’ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்’ மற்றும் ’ரைஸ் ஆப் தி பீஸ்ட்ஸ்’ ஆகிய படங்களும் தமிழில் டப் செய்து இந்த வாரம் வெள்ளி அன்று வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.