'பிச்சைக்காரன் 2' படத்தை அடுத்து விஜய் ஆண்டனியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
விஜய் ஆண்டனி நடித்த ’பிச்சைக்காரன் 2’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகர், இசையமைப்பாளர், இயக்குனர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்து வரும் விஜய் ஆண்டனி தற்போது ’அக்னி சிறகுகள்’ ’கொலை’ ’மழை பிடிக்காத மேகம்’ ’வள்ளிமயில்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடித்து வரும் படங்களில் ஒன்று ’கொலை’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 21 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய ஸ்டில் ஒன்று சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் ஆண்டனி ஜோடியாக ரித்திகா சிங் நடித்துள்ள இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, ஜான்விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். பாலாஜி குமார் இயக்கத்தில், சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில், கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் உருவாகும் இந்த படத்தை செல்வா என்பவர் படத்தொகுப்பு செய்துள்ளார்.