நடிகருடன் நெருக்கமான முத்த காட்சியில் நடித்து, டெட்டால் ஊற்றி வாய்யை கழுவினேன்.. 64 வயது நடிகையின் பேட்டி...

நடிகருடன் நெருக்கமான முத்த காட்சியில் நடித்து, டெட்டால் ஊற்றி வாய்யை கழுவினேன்.. 64 வயது நடிகையின் பேட்டி...

இந்தி சினிமாவில் 1982ல் வெளியான சாத் சாத் திரைப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நீனா குப்தா. அதன்பிறகு இவரின் நடிப்பு திறமையால் அறிமுகமான ஒரே வருடத்தில் 6 படங்களில் நடித்தார்.

இவர் உத்சவ், லைலா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றிய பெருமை உடையவர். அதனை தொடர்ந்து நாடக தொடர்களில் நடித்தார். சிறிது காலம் பட வாய்ப்புகளை இழந்து இருந்த நீனா குப்தா 2009ம் ஆண்டு மீண்டும் நடிக்க தொடங்கினார்.

பதாய் ஹோ, மியூசிக் டீச்சர், தி லாஸ்ட் கலர் போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் மிஸஸ் சட்டர்ஜி Vs நார்வே.

இதனை தொடர்ந்து, இவர் தற்போது பிரபலமாக பேசப்படும் ஆந்தாலஜி படமான "தி லஸ்ட் ஸ்டோரீஸ் 2"வில் நடித்து வருகிறார். இதில் கஜோல், விஜய் வர்மா, தமன்னா, மிருணாள் தாகூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நீனா குப்தா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியதாவது,

"பல வருடங்களுக்கு முன்பு சீரியலில் திலீப் தவானுடன் இணைந்து நடித்தேன். அப்போது அதில் லிப் லாக் முத்த காட்சி ஒன்று இடம்பெற்றது. இந்திய தொலைக்காட்சி சீரியல் வரலாற்றில் முதல் முறையாக ஒரு லிப்லாக் என்று கூறலாம்.

 

நடிகருடன் நெருக்கமான முத்த காட்சியில் நடித்து, டெட்டால் ஊற்றி வாய்யை கழுவினேன்.. 64 வயது நடிகையின் பேட்டி | Neena Gupta About Her Lip Lock Experience

அந்த காட்சியில் நடிக்க நான் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தயாராக இல்லை. மேலும், மிகுந்த பதற்றத்துடன் தான் இருந்தேன். திலீப் என்னுடைய நண்பன் இல்லை. தெரியாத ஒருவரை முத்தமிடுதல் போல் நடிப்பது மிக கடினமாக இருந்தது.

இருப்பினும் நான் ஒரு நடிகை என்பதால் என்னை சமாதானப்படுத்தி கொண்டு அந்த காட்சியில் நடித்தேன். அந்த காட்சி முடிந்த பிறகு டெட்டால் ஊற்றி எனது வாயை சுத்தம் செய்தேன்" என தெரிவித்துள்ளார். 

LATEST News

Trending News