புது டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை லாக் செய்த பிக்பாஸ்..தவிக்கும் பிரபலங்கள்!

புது டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை லாக் செய்த பிக்பாஸ்..தவிக்கும் பிரபலங்கள்!

பிக்பாஸ் வீட்டில் இன்றைய நாளுக்கான புது டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.

புது டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை லாக் செய்த பிக்பாஸ்..தவிக்கும் பிரபலங்கள்! | Bigg Boss Tamil 7 13Th October 2023 Promo 2

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனன்யா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அதிகமான மன அழுத்தம் காரணமாக பவா செல்லத்துரையும் வெளியேறியுள்ளார். தற்போது பிக்பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் இருந்து வருகிறார்கள்.

பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு அறையில் மூன்று போட்டியாளர்கள் இருக்க வேண்டும்.

புது டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை லாக் செய்த பிக்பாஸ்..தவிக்கும் பிரபலங்கள்! | Bigg Boss Tamil 7 13Th October 2023 Promo 2இதில் என்ன டுவிஸ்ட் என்றால் அந்த அறையில் கொஞ்ச நேரத்திற்கு மேல் இருக்க முடியாது. மாறாக பின்னணியில் ஒரு பாடல் இசைக்கப்படுகின்றது.

இந்த சத்தம் ஆரம்பத்தில் போட்டியாளர்களால் ரசிக்கக்கூடிய வகையில் இருந்தாலும் நேரம் செல்ல செல்ல போட்டியாளர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் தரையில் படுத்து கொண்டும், காதை பொற்றிக் கொண்டும் இருக்கிறார்கள்.

இதிலிருந்து பின் வாங்கினால் பிக்பாஸ் வீட்டில் சமைக்கப்படும் உணவுகள் தரப்பட மாட்டாது என நிபந்தனை கொடுக்கப்பட்டுள்ளது.  

LATEST News

Trending News