ரஜினி படத்தை காபி அடித்த விஜய் டிவி.. தமிழும் சரஸ்வதியும் அடுத்த வார ப்ரொமோ
விஜய் டிவியில் தற்போது முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது தமிழும் சரஸ்வதியும். அந்த தொடரின் அடுத்த வார ப்ரொமோ தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது..
அதில் ஒரு நபரை பார்க்க பெங்களூருக்கு தமிழ் மற்றும் நண்பர் செல்கின்றனர். அங்கு ஏர்போர்ட்டில் ஒரு சம்பவம் நடக்கிறது. அதில் நடக்கும் சண்டையில் தமிழ் அந்த பெண்ணை அறைந்துவிடுகிறார்.
அதற்கு பிறகு தமிழ் தான் போக வேண்டிய அலுவலகத்திற்கு சென்று பார்க்கிறார். தான் பார்க்க வந்தவரை தான் ஏர்போர்ட்டில் அறைந்தார் என்பது அப்போது தான் தெரிய வருகிறது.
இந்த கதை அப்படியே ரஜினி நடித்த மன்னன் படத்தில் இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது என நெட்டிசன்கள் தற்போது விமர்சித்து வருகின்றனர்.