நானும் மனுஷி தானே! கம்பீரமாக நின்ற மாயா கண்கலங்கியது ஏன்
பிக் பாஸில் எதையும் கண்டுகொள்ளாத கம்பீர போட்டியாளராக வலம் வரும் மாயா நானும் மனுஷி தானே என்று கண்கலங்கியுள்ளார்.
பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார்.
பின்பு பவா செல்லத்துரை வீட்டில் இருப்பது பிடிக்காமல் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினையும் இரண்டாகவே இருந்து வருகின்றது.

இந்த வாரத்திற்கான தலைவராக பூர்ணிமா இருந்து வரும் நிலையில், இன்று பிக்பாஸ் புதிய டாஸ்க் ஒன்றினை கொடுத்துள்ளார்.
இதில் காதல் ஜோடியாக வலம்வந்த ரவீனா மற்றும் மணி சந்திரா இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அனைவரிடமும் கம்பீரமாக நின்று பேசும் மாயா கண்கலங்கி விக்ரமிடம் அழுதுள்ளார்.