கேப்டனாக ஆட்டம் போட்ட பூர்ணிமா! வச்சு செய்த பிக்பாஸ்

கேப்டனாக ஆட்டம் போட்ட பூர்ணிமா! வச்சு செய்த பிக்பாஸ்

அக்டோபர் 1ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 தற்போது 5 வாரத்தை கடந்து இருக்கிறது, மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தற்போது வரை 5 பேர் வெளியேறிய நிலையில், வைல்ட் கார்ட் என்ட்ரியாக 5 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

பலரும் சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி தங்களது விளையாட்டை விளையாடி வருகின்றனர், இந்த சீசனில் யாரை ஆதரிப்பது என ரசிகர்கள் பலருக்கும் குழப்பமான சூழலே நிலவி வருகிறது.

மிகவும் ஆக்ரோஷமாக எடுத்தவுடன் சண்டை என்றே பலரும் விளையாடுகின்றனர், தலைவரின் பேச்சையும், பிக்பாஸின் பேச்சையும் மதிக்கிறார்களா இல்லையா என்பதே பலரது கேள்வியாகவும் இருக்கிறது.

 

இந்நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்ற விஜே அர்ச்சனா முதல் நாளை அழுதார், புதிதாக வந்தவர்களை இப்படித்தான் நடத்துவதா என்றும், சுயமரியாதை மிகவும் முக்கியம் என்றும் பேசினார்.

குறிப்பாக மாயாவின் பேச்சும், நடவடிக்கையும் பலருக்கும் எரிச்சலையூட்டுகிறது, இவருடன் சேர்ந்து பூர்ணிமா மற்றவர்களை நடத்தும் விதமும் சரியாக இல்லை.

கேப்டனாக ஆட்டம் போட்ட பூர்ணிமா! வச்சு செய்த பிக்பாஸ் | Bigg Boss Roasted Poornima

அதுவும் நான் தான் கேப்டன் என அடிக்கடி இவர் கூறும் விதமும், சுயமாக முடிவெடுக்கும் தன்மையும் அங்கிருப்பவர்களையே எரிச்சலடைய வைக்கிறது.

வந்த முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் போட்டியாளர்களை ஸ்மால் பாஸ் ஹவுஸ்க்குள் அனுப்பி வைத்தனர்.

 

இப்படி சென்று கொண்டிருக்க, பூர்ணிமாவை உள்ளே அழைத்த பிக்பாஸ், யாரை இம்ப்ரஸ் செய்ய இதையெல்லாம் செய்கிறீர்கள், பிக்பாஸ் வீட்டில் விதிகள் மிக முக்கியம்.

இன்று நீங்கள் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது, ஒரு கேப்டனாக வீட்டை சரியாக வைக்க வேண்டும்.

என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றால் கேப்டன் எதற்கு? உங்கள் விருப்பதற்கு ஏற்ப முடிவு செய்கிறீர்கள் என கடுமையாக திட்டினார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத பூர்ணிமா மன்னிப்பு கேட்டுக்கொண்டதுடன் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

LATEST News

Trending News