ஏதோ, என்னால முடிஞ்சது: வெளியே வந்த பின்னர் பிரதீப்பின் உருக்கமான பதிவு

ஏதோ, என்னால முடிஞ்சது: வெளியே வந்த பின்னர் பிரதீப்பின் உருக்கமான பதிவு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரபல நிகழச்சியான பிக்பாஸில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்ட பிரதீப் முதன்முதலாக ஒரு ட்விட் செய்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

60 ஆயிரம் சம்பளத்திற்கு அரச வேலையுடன் இருந்தவர் தான் பிரதீப் ஆண்டனி. இவர் இந்த வேலையும் விட்டு தனக்கென ஒரு வாய்ப்பு கிடைத்து விடாத என்று எண்ணி சினிமாவில் பல அவமானங்களை சந்தித்து, ஒரு வெற்றிகாக பிக்பாஸ் வீட்டிற்கு சென்றார்.  

இவர் அங்குள்ள போட்டியாளர்களிடம் எல்லை மீறி தகாத கெட்ட வார்த்தைகளால் பேசியதால் நேற்று அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

ஏதோ, என்னால முடிஞ்சது: வெளியே வந்த பின்னர் பிரதீப்பின் உருக்கமான பதிவு | Bigg Boss First Tweet Of Pradeep After Eviction

இவர் வெளியேறியது சக போட்டியாளர்களுக்கு சந்தோஷமானதாக இருக்கலாம். ஆனால் ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியான விடயம் தான் எனலாம்.  

கவின், பிரியங்கா, சினேகன் உள்பட பலர் அவரது வெளியேற்றத்தை மன வருத்தத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வெளியேறிய உடனே அவர் தனது ட்விட்ர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

'என்னுடைய பிபி7 கோப்பைகள்’ என ஒரு புகைப்படத்தை எடுத்து, 'ஏதோ என்னால் முடிந்தது, சிம்பிள் ஸ்டார்’ என தெரிவித்துள்ளார். 

 பிக் பாஸ் வீட்டில் தனக்கு கிடைத்த ஸ்டார், லைக்ஸ், டிஸ்லைக் பட்டன்களை அவர் புகைப்படம் பதிவு செய்துள்ளார். இந்த பதிவானது வைரலாகி வருவதோடு, பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

மேலும் 'இந்த கொடூரமான வெளியேற்றத்திற்கு நீங்கள் தகுதியானவர் அல்ல. யாரும் இங்கு சரியானவர்கள் இல்லை. உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதது! பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் உங்களின் தனித்துவமான விளையாட்டுக்காக நீங்கள் நினைவுகூரப்படுவீர்கள்' எனவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

LATEST News

Trending News