அர்ச்சனாவை கூட்டணி சேர்ந்து ஒதுக்கும் போட்டியாளர்கள்.. கமல் என்ன கூறப்போகிறார்...

அர்ச்சனாவை கூட்டணி சேர்ந்து ஒதுக்கும் போட்டியாளர்கள்.. கமல் என்ன கூறப்போகிறார்...

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா நிக்ஷன் இடையே எல்லைமீறிய வாக்குவாதம் அரங்கேறி வருகின்றது.

பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது இரண்டு மாதம் நிறைவடைந்துள்ளது.

இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா என 12 பேர் வெளியேறியுள்ளனர்.

அர்ச்சனாவை கூட்டணி சேர்ந்து ஒதுக்கும் போட்டியாளர்கள்.. கமல் என்ன கூறப்போகிறார்? | Archana Nixen Fight Other Contestant Againstஇதில் இரண்டு பேர் உள்ளே மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளர்களாக வந்துள்ளனர். இந்த வாரம் வீட்டின் தலைவராக விஷ்னு காணப்படுகின்றார்.

இந்த வாரத்தில் சுமூகமாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் வீட்டில் இன்று அர்ச்சனா மற்றும் நிக்ஷன் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.

நிக்ஷன் கடுமையாக அர்ச்சனாவை பேசியுள்ளார். மேலும் ஒரு கூட்டணியாக சேர்ந்து அர்ச்சனாவை ஒதுக்கவும் செய்கின்றார். நிக்ஷன் பேசிய வார்த்தைகளுக்கு கமல்ஹாசன் என்ன கூறப்போகின்றார் என்ற கேள்வி பார்வையாளர்களுக்கு எழுந்துள்ளது.  

LATEST News

Trending News