அவர்களே கால் செய்து அப்படி பேசுவாங்க!! நடிகை சங்கீதா தமிழை ஒதுக்க இதுதான் காரணம்..

அவர்களே கால் செய்து அப்படி பேசுவாங்க!! நடிகை சங்கீதா தமிழை ஒதுக்க இதுதான் காரணம்..

பிரபல நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை சங்கீதா பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். அவர் நடிப்பில் வெளியான பிதாமகன் படம் மிகப்பெரிய இடத்தை அவருக்கு கொடுத்தது. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நான் நடித்திருக்கிறேன். ஆனால் எனக்கு தமிழைவிட தெலுங்கில் நடிப்பதுதான் பிடிக்கும்.

அதற்கு காரணம், எனக்கு தமிழைவிட தெலுங்கில் நல்ல மரியாதை கிடைக்கிறது, நான் தமிழை பிடிக்காது என பேசுவதால் தமிழ் ரசிகர்கள் என்மீது கோபப்பட்டாலும் பரவாயில்லை. உண்மையை நாம் கூறிதான் ஆகவேண்டும். தமிழில் நடிக்கும்போது சரியான மரியாதை கிடைக்காது. தமிழில் யாரிடமும் வாய்ப்பு கேட்டது கிடையாது. தெலுங்கில் நல்ல வரவேற்பு எனக்கு கிடைக்கிறது. நல்ல சம்பளம், நிறைய வாய்ப்புகளும் கிடைக்கிறது.

அவர்களே கால் செய்து அப்படி பேசுவாங்க!! நடிகை சங்கீதா தமிழை ஒதுக்க இதுதான் காரணம்.. | Angeetha Share No Getting Repect From Tamil Cinema

ஆனால் தமிழில் இருந்து சிலர் எனக்கு வாய்ப்புகேட்டு போன் செய்கிறார்கள் என்றால், அவர்கள் ஒரு மரியாதையே இல்லாமல் பேசுவார்கள். ஏதோ அவர்களே எனக்கு வாழ்க்கை தருவதுபோல் பேசுவார்கள். நான் என்னமோ கஷ்டப்பட்டு கரண்ட் பில் கூட கட்ட முடியாமல் இருக்கிறேன் என்பது போல் பேசுவார்கள்.

உங்களுக்கு இவ்வளவு தான் சம்பளம் என்று அவர்களே முடிவெடுத்துவிடுவார்கள். நீங்க வந்து நடித்து கொடுத்துவிட்டு போ என்றும் சொல்கிறார்கள். அவர்களுக்கு போன் செய்து நான் வாய்ப்ப்ய் கேட்கவில்லையே?. அவர்கள் தான் எனக்கு போன் செய்து நடிக்க கேட்கிறார்கள்.

அவர்களே கால் செய்து அப்படி பேசுவாங்க!! நடிகை சங்கீதா தமிழை ஒதுக்க இதுதான் காரணம்.. | Angeetha Share No Getting Repect From Tamil Cinema

அப்போது, என்னுடைய ஒர்த் என்னவென்று நான் தானே சொல்லவேண்டும் என்று சொன்னால், அதெல்லாம் சரியா இருக்கும் என்று கூறுவார்கள். எனக்கு இந்தமாதிரி பேசினால் பிடிக்காது. எனக்கு அவர்கள் மரியாதை கொடுக்கவேண்டும், ஆனால் அவர்கள் அதை கொடுப்பதில்லை என்பதால்தான் நான் தமிழ் படங்களில் அதிகமாக நடிப்பது இல்லை என்று சங்கீதா ஓப்பனாக தெரிவித்திருக்கிறார்.

LATEST News