மீண்டும் மீண்டுமா.. மூன்றாவது கல்யாணம் பற்றி ஓப்பனாக பேசிய அமீர் கான்..

மீண்டும் மீண்டுமா.. மூன்றாவது கல்யாணம் பற்றி ஓப்பனாக பேசிய அமீர் கான்..

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அமீர் கான், சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். அமீர் கான் ஏற்கனவே இரு திருமணம் செய்து இருவரையும் விவாகரத்து பெற்ற நடிகர். சமீபத்தில் ரியா சக்ரபோர்ட்டியின் பாட்காஸ்ட் பேட்டியில் கலந்து கொண்டு சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

மீண்டும் மீண்டுமா.. மூன்றாவது கல்யாணம் பற்றி ஓப்பனாக பேசிய அமீர் கான்.. | Aamir Khan Breaks Getting Married For Third Time

அதில், நான் ஏற்கனவே இருமுறை விவாகரத்து பெற்றவன் என்பதால் திருமணத்தை பற்றி எந்த ஆலோசனையும் கேட்கவேண்டாம். எனக்கு தனியாக இருக்க விருப்பமில்லை, எனக்கு ஒரு துணை வேண்டும். நான் விவாகரத்து செய்த இரு முன்னாள் மனைவிகளுடன் இன்றுவரை நல்ல உறவுமுறையில் இருக்கிறேன்.

நாங்கள் ஒரு குடும்பம் போல் இருக்கிறோம். வாழ்க்கை தீர்மானிக்க முடியாதது, எல்லா திருமண வாழ்க்கையும் ஒத்துப்போவதில்லை. எனக்கு தற்போது 59 வயதாகிவிட்டது. எப்படி மீண்டும் திருமணம் செய்துகொள்ள முடியும்.

அதுமிகவும் கடினம், நான் என் குழந்தை, குடும்பம் என்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிரேன், இன்னும் சிறந்த மனிதனாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என்று அமீர் கான் தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News