கர்ப்ப காலத்தில் இப்படியொரு போட்டோஷூட்!! நடிகை தீபிகா படுகோனின் புகைப்படங்கள்..
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகர் தீபிகா கடந்த 2018ல் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி இத்தனை ஆண்டுகளாக படங்களில் பிஸியாக நடித்து வந்த தீபிகா படுகோன், சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை வெளிப்படையாக கூறி புகைப்படங்களை பகிர்ந்தார்.

இடையில் இருவருக்கும் கருத்துவேறுபாடு இருப்பதாகவும் பிரிந்துவிட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் கர்ப்பத்தை அறிவித்தார் தீபிகா.
தற்போது பேபி பம்ப் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பலர் அவரது போட்டோஷூட்டை புகழ்ந்தாலும் சிலர் விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.







