அவங்கதான் பேசிக்கனும்.. இல்லன்னா சண்டை போடனும்.. பிரியங்கா - மணிமேகலை பற்றி பேசிய சீரியல் நடிகை..

அவங்கதான் பேசிக்கனும்.. இல்லன்னா சண்டை போடனும்.. பிரியங்கா - மணிமேகலை பற்றி பேசிய சீரியல் நடிகை..

கடந்த சில வாரங்களாக குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் மணிமேகலை - பிரியங்கா பற்றிய வாதம் தான் பேசு பொருளாக இருக்கிறது. இருவரிடம் யார்மேல் தப்பு என்று பல விஜய் டிவி பிரபலங்களிடம் இதுபற்றி கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. அதற்கு சிலர் ஓப்பனாக ஆதரவை தெரிவித்தும் சிலர் மழுப்பியபடி கருத்துக்களை கூறியும் வருகிறார்கள்.

அவங்கதான் பேசிக்கனும்.. இல்லன்னா சண்டை போடனும்.. பிரியங்கா - மணிமேகலை பற்றி பேசிய சீரியல் நடிகை.. | Sharanya Open Up About Priyanka Manimegalai Issue

தற்போது சீரியல் நடிகையும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவருமான நடிகை சரண்யா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நடக்கும் போது நான் அங்கே இருந்தேன். ஆயினும் பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் ஏற்பட்ட சண்டைக்கு முழு முதல் காரணம் என்ன என்பது குறித்து பார்வையாளராக நமக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

அவங்கதான் பேசிக்கனும்.. இல்லன்னா சண்டை போடனும்.. பிரியங்கா - மணிமேகலை பற்றி பேசிய சீரியல் நடிகை.. | Sharanya Open Up About Priyanka Manimegalai Issueஇந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் தயாரிப்பு தரப்பினரும் உட்கார்ந்து பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் சண்டைப்போட்டுக்கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் தான் அங்கே இருந்தாலும் எந்தமாதிரியான சூழலில் அவர் இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து நான் யூகிக்க முடியாது.

ஆனால் தான் அங்கே சென்றபோது சூழல் சரியில்லை என்பது மட்டும் எனக்கு தெரிந்தது என்று சரண்யா தெரிவித்துள்ளார். முன்னதாக இதே கருத்தைதான் அந்த நிகழ்ச்சியின் கோமாளி புகழும் பேசியிருந்தார்.

அவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனையை அவர்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று புகழ் கூறியதை போன்று சரண்யாவும் இந்த கருத்தினை கூறியிருக்கிறார்.

LATEST News

Trending News