திடீரென நடிகை கயாடு லோஹர் எடுத்த முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகை கயாடு லோஹர் திடீரென சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
டிராகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை கயாடு லோஹர். 'தி பாரடைஸ்', 'இதயம் முரளி', 'இம்மார்டல்', 'மஞ்சணத்தி', ஐ ஏம் கேம்' என பல திரைப்படங்களை இவர் கைவசம் வைத்துள்ளார்.
இப்படி தொடர்ந்து பிஸியாக படங்களில் நடித்து வரும் கயாடு லோஹர், சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகப் போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அவர் பதிவிட்டுள்ளதாவது: "சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்கப் போகிறேன். சில நேரம் நமது உடலுக்கு ஓய்வு கொடுப்பது போலவே, மனதுக்கும் ரெஸ்ட் கொடுக்க வேண்டி இருக்கிறது. நான் இதிலிருந்து விலகி இருந்து, என்னுடன் நேரத்தைச் செலவிட வேண்டும் என உணர்கிறேன். அதனால்தான் இந்த முடிவு.

எனக்கு ஆதரவளித்த எல்லோருக்கும் நன்றி. நான் சோசியல் மீடியாவில் சில காலம் விலகி இருந்தாலும், எனது முக்கிய அப்டேட்களை என்னுடைய டீம் இங்கே வெளியிடும். விரைவில் மீண்டும் சந்திக்கிறேன்" என கயாடு லோஹர் பதிவிட்டுள்ளார்.