பிரியங்கா மோகனா இது? மைக்ரோ டூ பீஸ் உடையில்.. உச்ச கட்ட கிளாமர்!

பிரியங்கா மோகனா இது? மைக்ரோ டூ பீஸ் உடையில்.. உச்ச கட்ட கிளாமர்!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனது அழகிய தோற்றமும் நடிப்புத் திறமையும் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பிரியங்கா மோகன். ‘டாக்டர்’, ‘டான்’ போன்ற வெற்றி படங்களில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து புகழ் பெற்ற அவர், ‘எதற்கும் துணிந்தவன்’, ‘கேப்டன் மில்லர்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.

இருப்பினும், சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாகவும், இதனால் கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்து மீண்டும் திரையுலகில் முன்னணி இடத்தை பிடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, ஒரு தெலுங்கு படத்தில் முதல் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க பிரியங்கா மோகன் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது அவரது வழக்கமான இமேஜுக்கு மாறாக இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

2019ஆம் ஆண்டு கன்னட படமான ‘ஒந்த் கதே ஹெல்லா’ மற்றும் தெலுங்கு படமான ‘கேங் லீடர்’ மூலம் அறிமுகமான பிரியங்கா, தமிழில் ‘டாக்டர்’ படத்தின் மூலம் பெரும் வரவேற்பை பெற்றார். 

ஆனால், சமீபத்திய சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராததால், அவரது மார்க்கெட் குறைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கவர்ச்சி உடைகளுடன் புதிய தோற்றத்தில் தோன்றுவது அவருக்கு புதிய வாய்ப்புகளை திறக்கும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தெலுங்கில் ‘சரிபோதா சனிவாரம்’ படத்தில் நானியுடன் நடித்த பிரியங்கா, தற்போது ஜெயம் ரவியுடன் ‘பிரதர்’ படத்திலும் நடித்துள்ளார். இந்த புதிய முயற்சி மூலம் தமிழ், தெலுங்கு சினிமாவில் மீண்டும் ஒரு வெற்றிகரமான ரவுண்ட் வர அவர் தயாராகி வருவதாக தெரிகிறது. 

LATEST News

Trending News

HOT GALLERIES