சிவகார்த்திகேயன் 3 - வது மகனா இது? இப்படி வளர்ந்துட்டாரே.. அழகிய போட்டோ வைரல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
தற்போது, இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இவர் கடந்த 2010ம் ஆண்டு தனது மாமன் மகள் ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதனா மற்றும் குகன் என ஒரு மகள் மற்றும் மகன் இருந்த நிலையில் கடந்த வருடம் 3வது மகன் பிறந்தார். அவருக்கு பவன் என்ற பெயர் வைத்திருந்தனர்.
இந்நிலையில் தனது 3வது மகன் பவன் 1 வயதை எட்டியுள்ளார். தற்போது, அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக குடும்ப போட்டோ ஒன்றை வெளியிட்டு சந்தோஷப்பட்டுள்ளார்.
இதோ அவரது 3வது மகனின் போட்டோ,