கட்சி பதவி வேணும்.. இல்லனா சிக்கல் ஆகிடும்.. நடிகையால் தூக்கம் தொலைத்த விஜய்.. யாருன்னு பாருங்க!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் (தவெக) கட்சியின் தலைவராக உருவெடுத்து, தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.
2024 பிப்ரவரி 2-ல் தொடங்கப்பட்ட இக்கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களுக்கு நேர்மையான, பாகுபாடற்ற அரசியல் மாற்றத்தை கொண்டுவர இலக்கு வைத்துள்ளது.
விஜய், தனது கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு, மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற்று வருகிறார். அவரது முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் 2024 அக்டோபரில் நடைபெற்று, கட்சியின் கொள்கைகளை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, விஜய்யின் கடைசி திரைப்படமாகக் கருதப்படும் ஜனநாயகன், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது.
இப்படம் ஜனநாயகத்தை மையமாகக் கொண்ட அரசியல் அதிரடி திரைப்படமாகும், இதில் விஜய் மக்கள் தலைவராக நடிக்கிறார். 2025 அக்டோபரில் வெளியாகவுள்ள இப்படம், தமிழ் சினிமாவின் முதல் ஆயிரம் கோடி வசூல் இலக்கை எட்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
விஜய்யின் அரசியல் அறிவிப்புக்குப் பின் வெளியாகும் இப்படம், அவரது அரசியல் பயணத்தை பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், பிரபல சின்னத்திரை நடிகையொருவர், “சின்னத்திரை நயன்தாரா” என அழைக்கப்படுபவர், தவெக கட்சியில் முக்கிய பதவி கோரி விஜய்யிடம் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் தனது செல்வாக்கை பயன்படுத்தி, கட்சியில் முக்கிய பொறுப்பு பெற விரும்புவதாகவும், இல்லையேல் சாதாரண உறுப்பினராக இருப்பதற்கு பதிலாக விஜய்க்கு அதாரவாக வாக்கு மட்டும் செலுத்துவது போதும் என யோசிப்பதாகவும் கூறப்படுகிறது.
இவரது பேச்சாற்றல் காரணமாக, தேர்தல் நட்சத்திர பேச்சாளராக விஜய் இவரை அறிமுகப்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், விஜய், கட்சி நடிகர்களின் கட்சியாக அடையாளப்படுத்தப்படுவதை தவிர்க்க, நடிகர்-நடிகைகளுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்குவதை கூடுமானவரை தவிர்த்து வருவதாக தெரிகிறது. இப்படி, திரை பிரபலங்களான தன்னுடைய நண்பர்கள் கட்சி பொறுப்பு கேட்டு கோரிக்கை வைப்பதால் மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் பல இரவுகள் தூக்கத்தை தொலைத்து வருகிறாராம் விஜய்.
இந்த நடிகை, தற்போது திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகையில், கட்சி பதவி கிடைத்தால் உடனடியாக தவெகவில் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“யார் யாரோ ஆட்சி செய்கிறார்கள், விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம்” என வெளிப்படையாக அறிவித்து, அவரது அரசியல் பயணத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.