மூன்று நாட்களில் உலகளவில் தக் லைஃப் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

மூன்று நாட்களில் உலகளவில் தக் லைஃப் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

நாயகன் தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகும். மணி ரத்னம் - கமல் கூட்டணியில் உருவான இப்படம் இன்று வரை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. நாயகன் வெற்றியை தொடர்ந்து இருவரும் எப்போது மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

மூன்று நாட்களில் உலகளவில் தக் லைஃப் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Thug Life Movie 3 Days Box Office

38 ஆண்டுகள் கழித்து தக் லைஃப் திரைப்படத்திற்காக இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்தது. இதனால் தக் லைஃப் படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு உண்டானது. இவர்களுடைய கூட்டணி மட்டுமின்றி முதல் முறையாக கமலுடன் சிம்பு இணைந்து நடித்தாலும் படத்தை ஆவலுடன் திரையில் காண ரசிகர்கள் காத்திருந்தனர்.

மூன்று நாட்களில் உலகளவில் தக் லைஃப் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Thug Life Movie 3 Days Box Office

கடந்த ஜூன் 5ம் தேதி திரைக்கு வந்த தக் லைஃப் திரைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. ஒரு பக்கம் மோசமான விமர்சனம் இப்படத்திற்கு கிடைக்க, மறுபக்கம் நெட்டிசன்கள் இப்படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மூன்று நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மூன்று நாட்களில் உலகளவில் தக் லைஃப் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Thug Life Movie 3 Days Box Office

அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 67 கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாளில் நல்ல வசூல் வந்த நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் அப்படியே குறைந்துவிட்டது.

LATEST News

Trending News