இந்த தமிழ் நடிகரின் முதல் பொண்டாட்டி நான்.. மேடையில் குண்டை தூக்கி போட்ட காவ்யா மாதவன்!

இந்த தமிழ் நடிகரின் முதல் பொண்டாட்டி நான்.. மேடையில் குண்டை தூக்கி போட்ட காவ்யா மாதவன்!

சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை காவியா மாதவனுக்கு நடிகர் மாதவன் விருது வழங்கிய கௌரவித்தார். 

சில நிமிடங்கள் பேசிய நடிகை காவியா மாதவன் அதனை தொடர்ந்து மாதவனிடம் தனிப்பட்ட முறையில் சில விஷயங்களை கூற ஆசைப்படுவதாக ஒரு விஷயத்தைக் கூறியது ஒட்டுமொத்த அரங்கத்தையும் அதிர வைத்தது. 

அவர் கூறியதாவது; நான் தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது நீங்கள் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தீர்கள். இப்போதும் மிகப் பெரிய நட்சத்திரமாக தான் இருக்கிறீர்கள். ஊட்டியில் என்னுடைய முதல் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. 

அப்போது நிறைய தமிழ் ரசிகர்கள் என்னை பார்க்க வந்தார்கள். நான் இப்போதுதான் முதல் தமிழ் படத்தில் நடிக்கிறேன் எதற்காக எத்தனை ரசிகர்கள் என்னை பார்க்க வருகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 

அப்போது என்னுடைய பெயர் காவியா மாதவன் என்பதால் அந்த படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் ஜெயசூர்யா இவர்தான் நடிகர் மாதவனின் மனைவி என்று படக்குழுவில் இருப்பவர்களிடம் சொல்லிவிட்டார். 

இந்த விஷயம் அப்படியே பரவி நான் மாதவனின் மனைவி என்று அந்த பகுதியில் பரவி விட்டது. இதனால் பல தமிழ் ரசிகர்கள் என்னை பார்க்க வந்தார்கள். இதனை நான் உங்களிடம் பலமுறை சொல்ல ஆசைப்பட்டிருக்கிறேன். 

கடந்த முறை சந்தித்தபோது கூட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் கூற முடியவில்லை. இப்போது கூறுகிறேன். என மேடையிலேயே இதனை சொல்லி இருக்கிறார். 

இதனை கேட்ட நடிகர் மாதவன் வெட்கத்தில் கண்ணம் சிவந்தார். சிறிது நேரம் கழித்து நான் என்னுடைய முதல் படத்தில் ஒரு வசனம் கூறுவேன். அதையே உங்களிடமும் கூறுகிறேன் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் என்று கூறினார்.

LATEST News

Trending News