கர்ப்பமான மான் நடிகை.. கடுப்பில் காதலன்.. இடியாப்ப சிக்கலில் இயக்குனர்.. காரி துப்பும் கோலிவுட்!
சமீபகாலமாக தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வரும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்து பிரபலமான ஹீரோயினாக மாறியவர் இந்த மான் நடிகை.
முன்னணி ஹீரோக்களுடன் ஹீரோயின் ஆகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் டூயட் பாடி வந்த அம்மணிக்கு மார்க்கெட் கிடுகிடுவென ஏறியது.
திடீரென ஸ்பீட் பிரேக்கர் போட்டது போல அம்மணியின் தலையில் இடியாய் வந்து விழுந்தது அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற ரிப்போர்ட். முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய கல்லூரி கால நண்பருடன் உல்லாச பறவையாக ஊர் சுற்றி வரும் இந்த மான் நடிகை தற்போது கர்ப்பமாக இருக்கும் காரணத்தினால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு ஆளாகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதனால் படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறாராம். அரை டஜன் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அம்மணி ஒழுங்காக சூட்டிங் வராமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டிருப்பது தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் கடுப்பில் ஆழ்த்தி இருக்கிறதாம்.
அதே சமயம் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் திருமணம் செய்த பின்பும் சினிமாவில் நடிக்க எந்த தடையும் இல்லை என்றும் காதலன் சொல்லியும் கூட திருமணத்திற்கு சம்மதிக்காமல் பட வாய்ப்பு தான் முக்கியம் என இருந்து வந்த நடிகை தற்போது கர்ப்பமாக இருக்கும் போதும் கூட திருமணம் வேண்டாம் என்ற முடிவில் இருப்பதால் கடுப்பில் இருக்கிறாராம் காதலன்.
அதே சமயம் கருவை கலைக்கும் எண்ணமும் தன்னிடம் இல்லை என்றும் காதலனிடம் தெளிவாக கூறிவிட்டாராம் மான் நடிகை. இருவரும் அதிகாரப்பூர்வமாக பொதுவெளியில் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் ஏற்கனவே பதிவு திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியும் உள்ளது. என்றாலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
எனவே அம்மணிக்கு குழந்தை பிறந்தாலும் கூட நாங்கள் ஏற்கனவே பதிவு திருமணம் செய்து விட்டோம் என்று சொல்லி சமாளித்து விடக்கூடிய சூழ்நிலை தான் இருக்கிறது.
பெரிய நடிகை திருமணம் முடித்து ஆறே மாதத்தில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டு நாங்கள் ஆறு வருடத்திற்கு முன்பே பதிவு திருமணம் செய்து கொண்டோம் என்ற உருட்டவில்லையா..? அதுபோல் எதையாவது உருட்டி விடலாம் என்றும் இப்போதாய்க்கு திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்ற விடாப்படியாக இருக்கிறாராம் அம்மணி.
இப்படி காதலன் கடுப்பு ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் சில படங்களின் தயாரிப்பாளர்கள் வேறு நடிகையை நாங்கள் படத்தில் நடிக்க வைக்கிறோம் நீங்கள் வாங்கிய அட்வான்சை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தொந்தரவு கொடுப்பதால் இடியாப்ப சிக்கலில் சிக்கி இருக்கிறாராம் அம்மணி.
இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ..? என்று காரி துப்புகிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர்.