திருமணம், குழந்தை இவற்றில் உடன்பாடு இல்லை.. சீரியல் நடிகை சந்தியாவின் மறுபக்கம்!
பெங்களூரில் இருந்து தமிழ் சின்னத்திரை பக்கம் வரும் பிரபலங்கள் பலர் உள்ளனர், அதில் ஒருவர் நடிகை சந்தியா. இவர் தமிழில் அத்திப் பூக்கள், சந்திரலேகா, வம்சம் போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானார்.
இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சந்தியா ராகம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், "யாரும் கிடைக்காததால் நான் சிங்கிளாக இல்லை, திருமணம் வேண்டாம் என்பதற்காகத்தான் நான் சிங்கிளாக இருக்கிறேன். அதற்கு முக்கிய காரணம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்ற ஒரு முடிவில் இருக்கிறேன்.
தற்போது இருக்கும் கால கட்டத்தில் ஒரு குழந்தையை பெற்று வளர்ப்பது மிகவும் கடினம் அதனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. ஏற்கனவே என் முதல் திருமணம் சரியாக அமையவில்லை.
அதன் என்னை புரிந்து கொண்டு என்னுடன் துணையாக இருக்கும் ஒரு நபர் கிடைத்தால் நான் கண்டிப்பாக இரண்டாம் திருமணம் செய்து கொள்வேன் ஆனால் அப்படி யாரும் கிடைக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
