பல கோடியில் பங்களா, ஆடம்பர கார்கள் என வாழும் நயன்தாரா.. அடேங்கப்பா!
நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் சந்திரமுகி, பில்லா என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தார். ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
41 வயதாகும் இவரின் சொத்து மதிப்பு விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதாவது அவரது முழு சொத்து மதிப்பு ரூ. 180 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இவர் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், மெர்சிடிஸ் ஜிஎல்எஸ் 350 டி, ஃபோர்டு எண்டெவர், பிஎம்டபிள்யூ 7 சீரி மற்றும் இன்னோவா கிரிஸ்டா உள்ளிட்ட சொகுசு கார்கள் உள்ளன.
ஹைதராபாத், சென்னையில் ரூ. 100 கோடி மதிப்பில் பங்களா மற்றும் கேரளாவில் உள்ள வீடுகள் உட்பட இந்தியா முழுவதும் நயன்தாரா பல ஆடம்பர சொத்துக்களை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.