இந்த சந்தானம் பட ஹீரோயினை ஞாபகமிருக்கா?.. பிறந்தநாளை தாய்லாந்தில் தாறுமாறா கொண்டாடிட்டாரே!
சென்னை: சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஆஷ்னா ஜாவேரி தனது 33வது பிறந்தநாளை முன்னிட்டு தாய்லாந்தில் உள்ள பிபி தீவில் பிகினி உடையில் மஜாவாக பர்த்டேவை கொண்டாடிய போட்டோக்களையும் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளார்.
கடைசியாக ஹன்சிகாவுடன் இணைந்து மை3 வெப்சீரிஸில் நடித்த இவர் அதன் பின்னர் ஆளே காணோம் என ரசிகர்கள் தேடிக் கொண்டிருந்த நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு பிகினி ட்ரீட் கொடுத்துள்ளார்.
மாலத்தீவில் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஸ்கூபா டைவிங், ஸ்பீட் போட் என ஏகப்பட்ட விசயங்களை தான் எக்ஸ்ப்ளோர் செய்ததாகவும் சீக்கிரமே கோலிவுட்டில் தனது நடிப்பில் அடுத்தடுத்து படங்களும் வெளியாகி ரசிகர்களை ஹேப்பி ஆக்கும் என பதிவிட்டுள்ளார்.
ஷாருக்கானுடன் நடித்தவர்: நடிகை ஆஷ்னா ஜாவேரி சந்தானம் படத்தில் அறிமுகம் ஆகி பிரபலமானவர். அதன் பின்னர் மீன் குழம்பும் மண் பானையும், பிரம்மா.காம், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, கன்னித்தீவு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஹன்சிகா ரோபோ போல நடித்த மை3 வெப்சீரிஸில் நடித்த இவர் இந்த ஆண்டு திரைவி படத்தில் நடித்திருந்தார். மேலும், வள்ளுவன் என்கிற படமும் கைவசம் உள்ளது. பாலிவுட் கிங் ஷாருக்கான் உடன் விளம்பர படம் ஒன்றிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்: பட வாய்ப்புகளே பெரிதாக இல்லை என்றாலும், நடிகைகள் நடித்த சில படங்களில் வாங்கிய சம்பளத்தை வைத்தும் இன்ஸ்டாகிராம், விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்டியும் ஜாலியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். தனது 33வது பிறந்தநாளை தாய்லாந்தில் உள்ள பிபி தீவில் கொண்டாடிய ஆஷ்னா ஜாவேரி பிகினி உடையில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை எல்லாம் வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளார்.
அண்டர் வாட்டரில் சாகசம்: மேலும், பிறந்தநாளை ஸ்பெஷலாக கொண்டாட நினைத்த ஆஷ்னா ஜாவேரி அண்டர் வாட்டரில் ஸ்கூபா டைவிங் எல்லாம் செய்து அசத்திய வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளார். சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆஷ்னா ஜாவேரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.