ஜேசன் சஞ்சய் பெயரில் போலியான அறிவிப்புகள்.. உடனடியாக அறிக்கை வெளியீடு.. அப்போ அந்த படம்?
சென்னை: டியூட் படத்தின் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் மகனும் சிக்மா படத்தின் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்கப் போவதாக நேற்று சில தகவல்கள் இணையத்தில் உலா வந்தன.
இந்நிலையில், உடனடியாக இப்படியொரு அறிக்கையை ஜேசன் சஞ்சய் வெளியிட்டுள்ளார். தனது சொந்த சமூக வலைதள பக்கங்கள் இவை மட்டும் தான் என்றும் தனியாக ரசிகர் மன்றமோ, ரசிக பக்கங்களோ இல்லை என்றும் அப்படி தனது பெயரை பயன்படுத்தி யாராவது எதையாவது தெரிவித்தால் அதற்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்று ஒரே போடாக போட்டுள்ளார்.
ஜேசன் சஞ்சய்யின் இந்த அறிவிப்பை பார்த்த உடனே கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அவர் நடிக்கப் போவதாக வெளியானவை முற்றிலும் வதந்தி என்று சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
ஜேசன் சஞ்சய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகள்:
என்னுடைய அதிகாரப்பூர்வமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சமூக ஊடகக் கணக்குகளை முறைப்படி அறிவிக்க இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். கீழே பட்டியலிடப்பட்டுள்ள கணக்குகள் மட்டுமே என்னால் நிர்வகிக்கப்படும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ கணக்குகள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Instagram:
பயனர் பெயர் - jason.sanjay_official
இணைப்பு - https://www.instagram.com/jason.sanjay_official?igsh=NjcwbXRnNTh tcmw0
Facebook:
பயனர் பெயர் - Jason Sanjay
இணைப்பு - https://www.facebook.com/share/1DHDJ5qM5K/
Twitter:
பயனர் பெயர் - Jason Sanjay Official
இணைப்பு - https://x.com/official_jsj
இவை தவிர, பிற டிஜிட்டல் தளங்களில் என் பெயர், புகைப்படம் அல்லது எனது அடையாளத்தைப் பயன்படுத்தி இயங்கும் மற்ற அனைத்து கணக்குகளும், பக்கங்களும் முற்றிலும் போலியானவை.
எனவே, மேலே குறிப்பிடப்படாத வேறு எந்தக் கணக்குகளிலிருந்தும் வரும் பதிவுகள், கருத்துகள் (Comments), நேரடிச் செய்திகள் (Messages) அல்லது வணிகத் தொடர்புகளுக்கு நான் எந்த வகையிலும் பொறுப்பேற்க மாட்டேன்.
அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றம்:
நாங்கள் எந்தவொரு அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றத்தையோ, சங்கத்தையோ அல்லது சமூகக் குழுவையோ அங்கீகரிக்கவில்லை, தொடங்கவில்லை அல்லது அதற்கு அனுமதி அளிக்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது "அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றம்" அல்லது "அங்கீகரிக்கப்பட்ட குழு" என்று உரிமை கோரும் எந்தவொரு குழுக்களும், பக்கங்களும் அல்லது கணக்குகளும் முற்றிலும் அதிகாரப்பூர்வமற்றவை மற்றும் அங்கீகரிக்கப்படாதவை ஆகும்.
இப்படிக்கு,
ஜேசன் சஞ்சய்” என பதிவிட்டுள்ளார்.
ஓடிடியில் வெளியான சிக்மா: இந்த மாதம் அக்டோபர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியான ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதியின் பத்தா நேற்று ஓடிடியில் வெளியான நிலையில், சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியான சிக்மா ஓடிடியில் வெளியாகி உள்ளது. விஜய் மகன் இயக்கிய படத்தை ஓடிடி ரசிகர்கள் இந்த வாரம் பார்த்து ரசிக்கலாம்.