3 திருமணம் செய்தது உண்மையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிக்பாஸ் 9 வாட்டர் லெமன் ஸ்டார்...
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்பட்டு வரும் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை தாண்டி ஒளிப்பரப்பாகி வருகிறது. கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்ற கெமி, எலிமினேட்டாகி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.
இதற்குமுன் வாட்டர் லெமன் ஸ்டார் திவாகர் எவிக்ட்டாகி வெளியேறினார். பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி பல நிகழ்ச்சிகளில் திவாகர் கலந்து கொண்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க அவருக்கு திருமணமாகிவிட்டதாக சில நாட்களுக்கு முன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி பேசுபொருளானது.

இதுகுறித்து எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் இருந்த திவாகர், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார். திவ்யா என்ற படத்தின் ப்ரீமியர் ஷோவில் கலந்து கொண்டபோது இதுகுறித்து பேசியிருக்கிறார்.
என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தவறான தகவல்களை சில யூடியூபர்கள் பரப்புகிறார்கள். நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன். 3 பெண்களை எல்லாம் நான் திருமணம் செய்யவில்லை, இதற்கு மேல் என்னைப்பற்றி தவறான, பொய்யான தகவல் வந்தால் அதை பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.

எனக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள், எனக்கு கெட்ட பெயரை பெற்றுத்தர சிலர் இப்படி செய்கிறார்கள். வெவ்வேறு குணமுடைய 20 பேர் ஒரே இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதையும் அங்கு புரிந்துகொண்டேன்.
பிக்பாஸிலிருந்து வெளியேறியதால் குழந்தைகள் அழுதார்கள், நடிப்பு அரக்கன் என்ற சொல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைரலாகிவிட்டது.
யார் பிக்பாஸ் வின்னராவார் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது, லைல்ட் கார்டு எண்ட்ரி நடந்தால் இன்னும் கேம் மாறலாம் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப் கிடையாது உண்மையாக அங்கு என்ன நடக்கிறது அதான் உண்மை என்று திவாகர் தெரிவித்துள்ளார்.