மாதம் ஒரு கிசுகிசு பரப்புகிறார்கள்.. நடிகருடன் காதல் குறித்து உண்மையை உடைத்து பேசிய மீனாட்சி சவுத்ரி
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மீனாட்சி சவுத்ரி. கோட், லக்கி பாஸ்கர், சங்கராந்திகி வஸ்துனம் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மீனாட்சி சவுத்ரி தெலுங்கில் ஒரு நடிகரை காதலித்து வருவதாக கிசுகிசு பரவி வருகிறது.

நாகர்ஜுனா குடும்ப உறவினரும், பிரபல நடிகருமான சுஷாந்த் என்பவரை மீனாட்சி காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.
ஆனால், எங்களுக்குள் காதல் இல்லை என நடிகை தரப்பு விளக்கம் கொடுத்துள்ளனர். இதற்கு முன் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மீனாட்சி தன்னை பற்றி மாதம் ஒரு கிசுகிசு பரப்புகிறார்கள் என கோபமாக பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.