இது விபச்சாரத்திற்கு சமம்.. நெஞ்சிருக்கும் வரை பட ஹீரோயின் மோசமான பதிவு.. சமந்தா கணவரின் முதல் மனைவி வேதனை..
கோலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகில் பிரபல நடிகையான சமந்தா, நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவுடன் காதலித்து 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருப்பினும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
விவாகரத்துக்குப் பின் இருவரும் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், கடந்த டிசம்பர் 1ஆம் தேதி சமந்தாவுக்கும், பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோருவுக்கும் கோவை ஈஷா மையத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்தத் திருமண புகைப்படங்களை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். இதையடுத்து, திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து ஹார்ட் ஐகான்களை பறக்கவிட்டனர். அதே நாளில், சமந்தாவின் முன்னாள் கணவர், நாக சைதன்யா தனது 'தூதா' திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆனதைக் குறிப்பிட்டு, ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.
இது சமந்தாவின் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. சமந்தா, 'தி ஃபேமிலி மேன் 2' திரைப்படத்தில் நடித்தபோது, அதன் இயக்குனரான ராஜ் நிடிமோருவுடன் காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ராஜ் நிடிமோரு ஏற்கனவே ஷாம்லி டே என்பவரைத் திருமணம் செய்துகொண்டு, பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார்.
இதனிடையே, தமிழ் சினிமாவில் 'நெஞ்சிருக்கும் வரை' படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை பூனம் கௌர், டிசம்பர் 1ஆம் தேதி தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் ஒரு சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டார்.
அதில், "ஒரு குடும்பத்தை அழித்துவிட்டு நீ ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொண்டாய். நன்றாக படித்த, சக்தி வாய்ந்த மற்றும் சுயநலமான பெண். பிஆர் வேலையால் உங்களை புகழ்கிறார்கள். பணத்தால் பலவீனமான, மோசமான நிலையில் உள்ள ஆண்களை வாங்க முடியும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பதிவு யாரை குறிப்பிடுகிறது, பணத்தால் ஆண்களை வாங்குகிறார்கள் என்று விபச்சாரத்திற்கு சமமாக ஒரு விஷயத்தை எழுதியுள்ளாரே.. என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், ராஜ் நிடிமோருவின் முன்னாள் மனைவியான ஷாம்லி டே பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அந்தப் பதிவில், "நீங்கள் தந்த அன்புக்கும் இனிய வார்த்தைகளுக்கும் நன்றி. நேற்று இரவு என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. பல விஷயங்களை சிந்தித்தேன். தன்னிடம் வரும் நல்ல எண்ணங்களை கவனிக்காமல் இருப்பது சரியல்ல என உணர்ந்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "பல ஆண்டுகளாக மெடிடேஷன் ஆன் ஹார்ட்ஸ் பயிற்சி செய்து வருகிறேன். அதில் உலகில் வாழும் அனைத்து உயிர்களும் அமைதி, அன்பு, மன்னிப்பு, கொடை, கருணை பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகிறேன். இன்று நான் பிரார்த்தித்ததற்கான பலனை பெற்று வருவதாகவும்" தெரிவித்துள்ளார்.
"தனக்கு பிஆர் செய்வதற்கு டீம் எல்லாம் இல்லை. என் சமூக வலைதளப் பக்கத்தை நானே நேரடியாக பார்த்துக் கொள்கிறேன். சமூக வலைதளம் என்பது மரியாதையுடனும் எதிர்மறை எண்ணங்கள் இல்லாத சூழலாகவும் இருக்க வேண்டும். தயவு செய்து அதனை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.
மற்றொரு ஸ்டோரியில், "டிராமா, பிரேக்கிங் நியூஸ் தேடும் யாருக்கும் இங்கே ஒன்றும் கிடையாது. மீடியா கவரேஜ், பிராண்ட் ப்ரமோஷன், பெய்ட் பார்ட்னர்ஷிப், அனுதாபம் என எதையும் நான் எதிர்பார்க்கவில்லை. யாரிடமும் எதையும் விற்கவும் முயலவில்லை" என்று ஷாம்லி டே பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவுகள் சமந்தா - ராஜ் திருமணத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நிலையில், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக வட்டாரங்களில் இது குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.