செல்வராகவன் மனைவி விவாகரத்துக்கு இது தான் காரணமா..? புதுசா இருக்கே..!

செல்வராகவன் மனைவி விவாகரத்துக்கு இது தான் காரணமா..? புதுசா இருக்கே..!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் மற்றும் அவரது மனைவி கீதாஞ்சலி (கீதா) இடையே பிரிவு ஏற்பட்டுள்ளதாக சமீப காலமாக இணையத்தில் வதந்திகள் பரவி வருகின்றன.

இந்த வதந்திகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது கீதாஞ்சலியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்வராகவனுடனான அனைத்து புகைப்படங்களும் நீக்கப்பட்டிருப்பதே. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டுள்ளது.

செல்வராகவன் 2011-ம் ஆண்டு தனது உதவி இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், திடீரென எழுந்த இந்த பிரிவு வதந்தி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு பேட்டியில் செல்வராகவன், "என் வாழ்க்கையில் மிகுந்த கோபமும் துயரமும் அடைந்த தருணம் விரைவில் தெரியவரும்" என்று கூறியது மீண்டும் வைரலாகி, இது விவாகரத்து தொடர்பானது தானா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

ஆனால், இதுவரை செல்வராகவன் அல்லது கீதாஞ்சலி தரப்பில் இருந்து எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

சிலர் செல்வராகவனின் மது அருந்தும் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கமே இந்த பிரிவுக்கு காரணம் என்று பேசி வருகின்றனர். சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சிக்கு கையில் சிகரெட்டுடன் வந்தது குறிப்பிடத்தக்கது..

செல்வராகவனின் தனிப்பட்ட பழக்கங்கள் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளியாகி வந்தாலும், அவை விவாகரத்து வதந்திகளுடன் நேரடியாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவில்லை.

செல்வராகவனின் முதல் திருமணம் நடிகை சோனியா அகர்வாலுடன் 2006-ல் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக 2010-ல் அது முடிவுக்கு வந்தது. தற்போது இரண்டாவது திருமணத்திலும் இதே போன்ற வதந்திகள் எழுந்துள்ள நிலையில், உண்மை நிலை என்ன என்பது விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் இத்தம்பதியர் மீண்டும் இணைவார்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். செல்வராகவன் தற்போது '7ஜி ரெயின்போ காலனி 2' உள்ளிட்ட படங்களில் பிஸியாக உள்ளார்.

LATEST News

Trending News