அறையில் உயிரற்ற நிலையில் கிடந்த பிரபல நடிகை... விபரீத முடிவிற்கு காரணம் என்ன?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் கௌரி சீரியல் நடிகை விபரீத முடிவை எடுத்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை நந்தினி பிரபல ரிவியில் கடந்த 2024ம் ஆண்டு முதல் கௌரி என்ற தொடரில், துர்கா மற்றும் கனகா என இரட்டை வேடத்தில் நடித்து வருகின்றார்.
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர், கன்னட சீரியல்கள் மூலம் நடிப்பை தொடர்ந்துள்ளார். தமிழில் இவர் அறிமுகமாகிய கௌரி என்ற சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை கொடுத்துள்ளது.

கௌரி சீரியல் படப்பிடிப்பு முதலில் பெங்களூரில் நடந்து வந்த நிலையில், தற்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் சென்னைக்கு வந்த கௌரிக்கு பிரேக் என்பதால் பெங்களூர் சென்றுள்ளார்.
இந்நிலையில் அங்கு அவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தற்போது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் காரணம் எதுவும் வெளியாகவில்லை.
இளம் வயதில் நந்தினி உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.