விஜய் கட்சிக்கு பிரச்சாரம் செய்த நடிகர் ராமராஜன்! அதற்கு சொன்ன காரணத்தை பாருங்க

விஜய் கட்சிக்கு பிரச்சாரம் செய்த நடிகர் ராமராஜன்! அதற்கு சொன்ன காரணத்தை பாருங்க

வரும் ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், நடிகர் விஜய் அவரது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ராமராஜன் விஜய் கட்சி வேட்பாளரை ஆதரித்து தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் பிரச்சாரம் செய்து இருப்பது வைரல் ஆகி இருக்கிறது.

அதிமுகவில் இருந்த அவர் தற்போது விஜய் கட்சியில் இணைந்துவிட்டாரா என பலரும் கேட்டு வருகின்றனர்.

விளக்கம்

இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கும் ராமராஜன் "நான் விஜய்யின் தவெக-வில் இணையவில்லை. 35 வருடமாக என்னுடன் இருக்கும் எனது உறவினர் தேர்தலில் போட்டியிடுவதால் அவருக்காக பிரச்சாரம் செய்தேன்."

"நான் தவெக-வில் சேரவில்லை. உறவினர் என்பதால் மட்டுமே பிரச்சாரம் செய்ய வந்தேன். வேறு எந்த காரணமும் இல்லை" என அவர் கூறியுள்ளார். 

LATEST News

Trending News

HOT GALLERIES