ஜனநாயகன் லீக்.. எல்ஐகே வீக்.. ப்ளூ சட்டை மாறன் LIK விமர்சனம்.. இந்த அடி அடிக்கிறாரே!

ஜனநாயகன் லீக்.. எல்ஐகே வீக்.. ப்ளூ சட்டை மாறன் LIK விமர்சனம்.. இந்த அடி அடிக்கிறாரே!

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருக்கும் படம் எல்ஐகே. இதில் அவருடன் க்ரித்தி ஷெட்டி, சீமான், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படமானது நேற்று திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்களிடம் ஓரளவுக்குத்தான் வரவேற்பை பெற்றிருக்கிறது. வசூலிலும் பெரிய இம்பேக்ட்டை உண்டு செய்யவில்லை. இநிலையில் ப்ளூ சட்டை மாறன் எல்ஐகே படம் பற்றிய விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

விக்னேஷ் சிவன் நீண்ட வருடங்கள் கழித்து இயக்கியிருக்கும் படம் எல்ஐகே. லவ் இன்சூரன்ஸ் கம்பெனியில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் சீமான், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். பெரிய இழுத்தடிப்புக்கு பிறகு இந்தப் படமானது நேற்று ரிலீஸானது. போட்டிக்கு எந்தப் பெரிய படமும் இல்லை; துப்பாக்கியோடு போட்டி போட்டு காணாமல் போன போடா போடி போல் இதற்கு ஆகாது என்று உச்சக்கட்ட நம்பிக்கையில் இருந்தார் விக்னேஷ் சிவன்.

LIK Review Blue Sattai Maran Slams Love Insurance Kompany as Boring

படம் வாங்கிய அடி: ஆனால் இந்தப் படம் ரிலீஸுக்கு முதல் நாள் விஜய்யின் ஜனநாயகன் இணையத்தில் லீக்காகிவிட்டது. அதன் காரணமாக அனைவரது கவனமும், பேச்சும் அந்தப் படத்தை சுற்றி நகர்ந்துவிட்டது. இருப்பினும் எல்ஐகேவுக்கு ஓரளவு எதிர்பார்ப்புடன் தியேட்டர்களுக்கு சென்றார்கள் ரசிகர்கள். கதைக்களம் நன்றாக இருந்தாலும் அதை உருவாக்கிய விதத்தில் விக்னேஷ் சிவன் சொதப்பிவிட்டார். அத்தனை உழைப்புகளும் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "கதையாக எடுத்துக்கொண்டால் இது வித்தியாசமான கதைதான். ஆனால் அந்தக் கதையை அவர்கள் நம்பவும் இல்லை; அப்படி எடுத்து செல்லவும் இல்லை. ஹீரோவை அவரது அப்பா ஆர்கானிக்காக வளர்க்கிறார். ஹீரோயினை அவரது அம்மா அப்டேட்டாக வளர்க்கிறார். கதைப்படி பார்த்தால் இதில் எது சரி என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். இவர்கள் ஹீரோ, வில்லன் கதையாக கொண்டு சென்றுவிட்டார்கள். 

எதுவுமே இல்லை: திரைக்கதையில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. டர்ன் அண்ட் ட்விஸ்ட் இல்லை. இதில் நிறைய காமெடி என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். எதுவும் ஒர்க் ஆகவில்லை. எந்த எமோஷனும் கனெக்ட் ஆகவில்லை. படத்தில் ஒரு மறுவாழ்வு மையம் இருக்கிறது. அதில் எல்லோரும் தன்னார்வமாக சென்று சேர்கிறார்களா இல்லை தண்டைக்காக சேர்கிறார்களா என சொல்லவில்லை. அனைத்தையும் மேம்போக்காக காட்டியிருக்கிறார். சிஜியில் மட்டும்தான் மெனெக்கெட்டிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் எப்போடா படம் முடியும் என்று ஆகிவிட்டது.

ஜனநாயகன் லீக்: இந்தப் படத்தை உட்கார்ந்து பார்ப்பதற்கான முக்கிய காரணம் ரவி வர்மனின் கேமரா ஒர்க்கை சொல்லலாம். இது காட்டு மொக்கையாக இருக்கும் என்பதில் எந்த அதிர்ச்சியும் இல்லை. இந்தப் படத்தை எடுத்து முடித்துவிட்டு நல்ல ஒரு பாதுகாப்பான தேதியில் ரிலீஸ் செய்தால் சேதாரம் குறையும் என திட்டமிட்டார்கள். ஒரிஜினல் விஜய் படம் இல்லை. டூப்ளிகேட் விஜய் படமான TN 2026தான் வருகிறது. அதை ஊமை குத்தாக குத்திவிடலாம் என பிளான் போட்டார்கள். ஆனால் எந்த அறிவிப்பும் இல்லாமல் ஒரிஜினல் விஜய் படத்தை (ஜனநாயகன்) கொண்டு வந்து இறங்கிவிட்டார்கள். ஜனநாயகன் படம் லீக் ஆனது வருத்தமான விஷயம்தான். இப்போது விக்னேஷின் மன குரல் என்னவாக இருக்கும், 'என் கூட சரசம் செய்வதற்கென்றே உங்க அப்பா, அம்மா பெத்துவிட்டாங்களா?.. போடா போடியின்போது துப்பாக்கி வந்து காலி செய்தது. இப்போது கஷ்டப்பட்டு ஒரு படத்தை ரிலீஸ் செய்தால் ஜனநாயகனை லீக் செய்றீங்களே என்றுதான் இருக்கும்" என்றார்.

Read more at: https://tamil.filmibeat.com/news/lik-review-blue-sattai-maran-slams-love-insurance-kompany-as-boring-175111.html

LATEST News

Trending News

HOT GALLERIES