சினிமாவிலிருந்து திரிஷா விலகுவது உண்மைதான்.. இதோ ஆதாரம்.. எல்லாம் அதற்காகத்தானா?
சென்னை: விஜய்யுடன் ஒரு திருமணத்துக்கு வந்ததிலிருந்து திரிஷாவை பற்றிய பேச்சாகத்தான் எங்கும் இருக்கிறது. அவரோ அதையெல்லாம் துளியும் கண்டுகொள்வதில்லை. அதேசமயம் காதல் குறித்து உருக்கத்துடன் போஸ்ட்டுகளையும் போடுகிறார். அவை வெகுவாக கவனத்தை ஈர்த்திருக்கின்றன. இந்நிலையில் அவர் சினிமாவிலிருந்து விலகப்போவதாக சில நாட்களாக தகவல்கள் வருகின்றன. அது அவரது ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை உண்டு செய்திருக்கிறது.
கோலிவுட்டில் 20 வருடங்களுக்கும் மேலாக டாப் ஹீரோயினாக திகழ்ந்துவரும் திரிஷா இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இடையில் வருண் மணியன் என்பவருடன் நிச்சயதார்த்தம் மட்டும் நடந்தது. சில காரணங்களால் திருமணம் நடக்கவில்லை. அதனையடுத்து சிங்கிளாக இருக்கும் அவர்; கரியரில் மட்டும் கவனம் செலுத்தினார். சூழல் இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்பு சங்கீதா விஜய் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவரிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று கேட்டிருந்தார். மேலும் ஒரு நடிகையையும் குறிப்பிட்டிருந்தார்.

ஜோடியாக வந்த திரிஷா: சங்கீதா குறிப்பிட்ட அந்த நடிகை திரிஷாதான் என்று பலரும் கணித்தார்கள். நிலைமை இப்படி இருக்க ஏஜிஎஸ் வீட்டு திருமணத்துக்கு விஜய்யுடன் ஜோடியாக வந்தார் திரிஷா. அது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. பலரும் அவர்களுக்கு எதிராக தங்களது கருத்துக்களை பதிவு செய்தார்கள். தவெகவினரும், விஜய் ரசிகர்களும், தங்கள் அண்ணாவிடமிருந்து விலகிவிடுங்கள் திரிஷா என்றும் ஓபனாக கோரிக்கை வைக்கிறார்கள். அவர் அதையெல்லாம் துளிகூட கண்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது.
இன்ஸ்டாகிராம் போஸ்ட்: இது ஒருபக்கம் இருக்க விஜய்யும், திரிஷாவும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் ஒருதரப்பினர் விவகாரமான ஆசையை முன்வைத்துவருகிறார்கள். அப்படி சில ரீல்ஸ்களும் உருவாக்கப்படுகின்றன; அவற்றுக்கு திரிஷாவின் தாய் உமாவும் லைக்கிடுகிறார். சூழல் இப்படி இருக்க இத்தனை வருடங்கள் காதல் குறித்து பெரிதாக எதுவும் பேசாத திரிஷா சமீபத்தில், 'காதல்தான் அனைத்தும் என்று இல்லை. ஆனால் காதல் இன்றி எதுவும் அர்த்தம் இல்லை' என்று தெரிவித்திருந்தார்.
காதலில் விழுந்த திரிஷா?: அவரது இந்தப் போஸ்ட் பல சந்தேகங்களை கிளப்பியது. திரிஷா காதலில் விழுந்துவிட்டார். அதனால்தான் இப்படி ஒரு போஸ்ட் போடுகிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் கிளம்பின. அதுமட்டுமின்றி விரைவில் அவருக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. விஜய்யின் அரசியல் கட்சியில் சேரப்போகிறார். எனவே அவர் சினிமாவை விட்டு விலகப்போகிறார். கருப்பு படமும், விஸ்வம்பரா படமும்தான் அவரது கடைசி படமாக இருக்கும் என்றும் தகவல்கள் வர ஆரம்பித்துவிட்டன. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர், தயாரிப்பாளர், நடிகர் சித்ரா லட்சுமணன் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அது உண்மைதான்: அவர் பேசுகையில், "நடிகை திரிஷா சினிமாவிலிருந்து விலகவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி உண்மைதான். சமீபத்தில் சில தயாரிப்பாளர்கள் என்னிடம் அதை உறுதி செய்தார்கள்" என குறிப்பிட்டிருக்கிறார். சினிமாவில் நீண்ட வருடங்களாக இயங்கிவருபவர் சித்ரா லட்சுமணன். திரிஷா சினிமாவிலிருந்து விலகுவது உறுதிதான் என்று அவரே சொல்லியிருப்பதால்; கண்டிப்பாக இது நடக்கும் என ரசிகர்கள் கருத தொடங்கிவிட்டார்கள். இதற்கிடையே அரசியல் பிரவேசத்துக்காகத்தான் அவர் சினிமாவை விடுகிறார் என்ற கருத்தும் வலு பெற்றிருக்கிறது.